நவம்பர் 04, 2011

இயற்கை தேவையை தள்ளிப்போடுபவரா நீங்கள்?

பைல்ஸ்(Piles)’ என்றழைக்கப்படும் மூலநோயைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.

இந்த பிரச்சனையை மருத்து உலகில் ஹெமராயிட்ஸ்’ (Haemorhoids) என்றுழைக்கப்படும் நம்முள் பலருக்கு இந்த உபாதை இருந்தாலும் மருத்தவரிடம் செல்லவோ அதைப்பற்றி சொல்லவோ ஏனோ கூச்சப்படுகிறார்கள்! இதில் கூச்சப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. தொண்டையில் சதை வளர்வதுப்போல்(Tonsils) இதுவும் ஒருவகை, அவ்வளவு தான்.

மலம் வெளியே வரும் பாதையில்(Anus) உள்ள இரத்தக் குழாய்கள் வீங்கி புடைப்பதால் வலி, சொறி எடுத்தல், சில நேரங்களில் இரத்தம் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன.

இதில் மூன்று வகை உள்ளன.

1.1st degree- உள்மூலம் இதில் இரத்தம் வடிதல் மட்டும் இருக்கும் வலி இருக்காது.

2.2nd degree- வெளிமூலம் சிறிது வெளியே புடைத்திருக்கும்(கோலிக்காய் போன்று) இதில் இரத்தம் வடிதலுடன் வலியும் சேர்ந்து இருக்கும்.

3.3rd degree- பாதையின் கடைசிப் பகுதி(Anus) வெளியே வந்து  துருத்திக் கொண்டிருக்கும். வலி, இரத்தம் வடிதல் சொறி எடுத்தல் எல்லாமே இருக்கும்.

இவை ஏன் ஏற்படுகின்றன?

1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்தால்

2. வயதாவதால்(இரத்தக் குழாய்கள் வலுவிழந்து விடுகின்றன)

3. கர்ப்பக் காலங்களில் கர்ப்பப்பை மூலத்திலுள்ள இரத்தக் குழாய்களின் மேல் அழுத்துவதால்.

4. மலம் இருக்க வேண்டும் எனத்தோன்றும் போது(Natures Call) சில பல காரணங்களால் அதைத் தவிர்த்து விட்டு நேரத்தையும் நளையும் கடத்துவதால்.

5. இயற்கையிலேயே (Hereditary) அந்த இடத்திலுள்ள இரத்தக் குழாய்கள் பலகீனமாக இருப்பதால் (weak and fragile veins)

மலம் கழிப்பதை தள்ளிப் போடுவதால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமா?

தினமும் கழிவுப் பொருட்கள் மலக்குடலை வந்தடையும் போது அது சற்றே இனக்கமாக நீர்ப்பதத்துடன் இருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை வெளியேற்றாவிட்டால் அதிலுள்ள நீரை மலக்குடல் திரும்ப உறிஞ்சி கொள்ளும் (Reabsorption)

அதனால் மலம் இறுகி கட்டியாகி விடுகிறது (Rock Like Mass) பின்பு அதை வெளியேற்ற நாம் கொஞ்சமாகவோ, அதிகமாகவோ சிரமப்பட வேண்டியிருக்கும் (Straining at stools) அதனால் மலத்துவாரம் வழுவழுப்புத் தன்மையை சிறிது சிறிதாக இழந்து அந்த இடத்திலுள்ள இரத்தக் குழாய்கள் சேதமடைந்து புடைக்க ஆரம்பிக்கின்றன விளைவு?  ‘மூலம்-Piles’

நிவாரணம்

1. “Sitz bath” எனும் ஒன்று Surgical Supplies கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி அதில் சுடு நீர்(warm water) நிரப்பி அதில் நமது அடிப்பாகம் படுமாறு ஓர் அரைமணிநேரம் அமரலாம் Epsom Salt எனும் உப்பை வாங்கி அதில் ஓர்கை அளவு எடுத்து சுடுநீரில் கலந்தும் உட்காரலாம். இவை வலி இருக்கும்(Anus) பகுதியில் இரத்த ஓட்டத்தை கூட்டும்; அதே வேளையில் புடைத்துள்ள மூலம்-பைல்ஸ்சுருங்கி வலியும் குறையும்.

2.அதேபோன்று, ஓர் பிளாஸ்ட்டிக் பையில் ஐஸ் கட்டிகளை நிரப்பி, அதை ஒரு தலையனை உறைக்குள் வைத்து அதன் மேலும் அரைமணி நேரம் உட்காரலாம்.

3. அல்லது சுடுநீரில் சிறிது நேரம், ஐஸ்கட்டிகளின் மேல் சிறிது நேரம் என மாறி மாறி உட்காரலாம்.

4. விக்ஸ் வேப்போரப் (Vicks Vaporub) எனும் மருந்தை வாங்கி வலிக்கும் இடத்தைச் சுற்றி (Around the anus not into the anus)தடவலாம்.

5. மாம்பழ சீசனில் மாங்கொட்டைகளைச் சேகரித்து நிழலில் நன்றாக காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டால் மூல வலி அதிகமாக இருக்கும் போது, 2 கிராம் பொடியை தேனில் குழைத்து காலையும் மாலையும் சாப்பிடலாம்.

6. வலி அதிகமாக இருக்கும் போது ஓரிரு நாட்கள் வழக்கமான உணவுகளைத் தவிர்த்து விட்டு, பழங்களாக உண்ணலாம்.

7. பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது(Piles)  வந்துவிட்டால் வலி இருக்கும் போது இடது பக்கமாக ஒருக்களித்து படுக்க வேண்டும் . இவ்வாரு நான்கு மணிநேரத்துக்கு ஒரு முறை ஓர் அரைமணி நேரத்துக்கு ஒரு முறை ஓர் அரைமணி நேரம் படுக்கலாம். அவ்வாறு செய்தால் பெருத்துவிட்டு கர்ப்பப்பை இரத்தக் குழாய்களின் மேல் அழுத்திக் கொண்டிருப்பது குறையும், அதனால் வலியும் குறையும்.

8. அதிகமாக வலி இருக்கும் போது அதிக காரம், போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

9. இறுதியாக நமது சொந்த முயர்சிகளினால் வலியோ இரத்தம் வடிதலோ நிற்காவிட்டால் மருத்துவரிடம் செல்வதே நல்லது ஏனென்றால் உங்களுக்கு வந்திருப்பது மூலவியாதியா(Piles) அல்லது மூல வெடிப்பா(Fissures) அல்லது மலக்குடலில் உள்ள வேறு எதாவது கோளாறா (புற்று நோயாகக்கூட இருக்கலாம்) எனத் தெரிந்து கொள்ளலாம்.

மருத்துவரால் என்னவெல்லாம் செய்ய இயலும்

1. உள் மூலமாக(internal piles) இருந்தால் இரத்தக் குழாய்கள் சுருங்குவதற்கும், மூலவாயின் வழுவழுப்புத் தன்மையை அதிகரிப்பதறகும், இரத்தக் குழாய்கள் வலிமையைக் கூட்டுவதற்கும் மருந்துகள் தரலாம்.

2. வெளி மூலமாக (External piles)  இருந்தால் வெளியே துருத்திக் கொண்டிருக்கும். இரத்தக் குழாய்களை சுற்றி ஒருவித நூலால் இறுக்கிக் கட்டி (Tie off) அது தானாகவே சுருங்கி கிழே விழும் படி செய்யலாம்.

3.லேசர்(Laser) எனும் ஒளிக்கற்றையால் அந்த இடத்தை கருக்கி (Burn away) விடலாம்.

4.இறுதியாக ஒரு சிறிய ஆபரேஷன் மூலம் நீக்கிவிடலாம்.

மூலம் (Piles)வராமல் அல்லது குறைந்தது அடிகடி வராமல் தடுக்க இயலுமா?
முயன்று பார்க்கலாமே! அதில் தவறில்லையே

1. முதலில் மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எப்படி? எவ்வளவு தலை போகிற வேலை இருந்தாலும் கழிவறை செல்லும் உணர்வு தோன்றி விட்டால் அதை புறக்கணிக்காது உடனே சென்று மலம் கழித்து விட வேண்டும்.

2.அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் உள்ளவர்கள் அதை ஈடுகட்டும் வகையில் சிறிது நேரம் நிற்கவோ அல்லது சற்று நடக்கவோ வேண்டும் ஒரு மணிநேரத்திற்கு  ஒருமுறை ஐந்து நிமிடங்கள் நடந்தாலே போதுமானது மலப்பாதையின் அழுத்தம் குறையும்.

3.உங்கள் சக்திக்கு மீறிய பொருட்களை தூக்குவதை தவிர்க்க வேண்டும்; கெளரவம் பார்க்காது (Ego உள்ளவர்கள் கவனிக்க) பக்கத்தில் இருப்பவரின் உதவியை நாடுவதில் தவறில்லை.

ஒரே இடத்தில் நின்று சைக்கிள் மிதிக்கும் ஒருவித உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும்(cycling on excersise bike)

4.உங்கள் சிறுநீர் மஞ்சள் கலரில்(Dark yellow) இல்லாமல் வெளிறிய மஞ்சள் கலரில்(Pale Yellow) இருக்குமாறு தண்ணீர் நிறைய பருக வேண்டும்.

5. உங்கள் உணவில் நார்ச்சத்து அதிகம் இருக்கும் வகையில் தானிய உணவுகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்

6. இறுதியாக, மலத்துவாரத்தைச் சுற்றியுள்ள தசைகளும்(A ring of muscles) இரத்தக் குழாய்களும் (viens) பலம் பெறும் வகையில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து செய்து வரலாம்.
நன்றி தூதுஆன்லைன்

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்