மார்ச் 17, 2011

கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள்



நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகத்தில் இஸ்லாத்தின் சட்டங்களை எடுத்துச் சொல்லி  1430  ஆண்டுகளுக்கு மேல் சென்றுவிட்டன இருப்பினும் இஸ்லாத்தை ஏற்றுகொண்ட முஸ்லிம்கள் இஸ்லாத்தின் முழுமையான சட்டங்களை தெரிந்து கொள்ளவில்லை
.

இஸ்லாம் என்றால் ஐவேளைத் தொழுவது ரமாலானில் நோன்பு நோர்ப்பது முடிந்தால் ஹஜ் செய்வது இவை மட்டும் தான் என்று பெரும்பான்மை முஸ்லிம்கள் கருதுகின்றனர் .மற்றவிஷயங்கள் எல்லாம் உலகம் சம்பந்தப்பட்டவை.இஸ்லாம் இதில் தலையிடுவதில்லை என எண்ணுகின்றனர்.

இவர்களின் இந்த எண்ணங்களுக்கு மாறாக மனித சமுதாயத்திற்கு ஏற்ப்படக்கூடிய 
அனைத்து விஷயங்களுக்கும் இஸ்லாம் தீர்வு தருகிறது. அனைத்து  விஷயங்களையுமே இஸ்லாத்தின் அடிப்படையிலேயே செய்ய வேண்டும் என கட்டளையிடுகிறது.

இப்படி இஸ்லாத்திலுள்ள இன்றைய சமுதாயம் மறந்துவிட்ட, அலட்சியப்படுத்திய, பல விஷயங்களில் இங்கு நாம் காணவிருப்பது
கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள்...

1 . அல்லாஹ் பெயர் கொண்ட பொருட்களை கழிவறைக்குள் செல்லும் போது கொண்டு செல்லக்கூடாது. ரஸூல்(ஸல்) அவர்கள் கழிவறைக்குள் செல்லுவதற்கு முன் தன் விரலில் அணிந்து இருந்த மோதிரத்தை 
கழட்டிவைத்துவிட்டு தான் செல்வார்கள் அந்த மோதிரத்தில் முஹம்மது  ரஸூலில்லாஹ் என்று பொறிக்கப்பட்டு இருந்தது ...   அபுதாவூத்

இக்கட்டான சில சந்தர்பங்களில் அவற்றை எடுத்துக்கொண்டுதான் போக 
வேண்டும் என்ற நிலை ஏற்ப்பட்டால் அல்லாஹ் பெயர் வெளியே தெரியாத 
நிலையில் போக வேண்டும் .

2 . மக்களின் பார்வையில் படாமல் மறைவாக போக வேண்டும் ..அபுதாவூத்  

3 . உள்ளே செல்வதற்கு முன் துஆ ஓத வேண்டும்
" அல்லாஹும்ம இன்னி அவுதுபிக்க மினல் குபுதி வல் கபாஇதி "
யா அல்லாஹ் ஆண் பெண் ஷைத்தான்களிடமிருந்து பாதுகாவல் தேடுகிறேன் .என்று ஓதி விட்டு இடது காலை முன் வைத்து போக வேண்டும் . ..புஹாரிமுஸ்லிம்.

4 . கழிவறைக்கு உள்ளே சென்ற பிறகுதான் ஆடைகளை உயர்த்தவேண்டுமே
தவிர கழிவறைக்கு உள்ளே செல்வதற்கு முன் வெளியிளிருந்தே ஆடையை
உயர்த்திக்கொண்டு செல்லக்கூடாது ..அபுதாவூத் -

ஒரு பெண்ணுக்கு எவ்வாறு முன் கை முகம் தவிர மற்ற அனைத்து பாகங்களும் மறைக்கப்பட வேண்டுமோ அதே போன்று ஒவ்வொரு ஆண்களும் தங்கள் தொப்புள் முதல் முட்டிகால் வரை மறக்கப்பட வேண்டும் எனவே வெளியில் இருந்து ஆடையை உயர்த்துவதினால் நம்முடைய அவ்ரத்கள்(மறைக்கப்படவேண்டிய  பாகம்)  வெளியே  தெரிய வாய்ப்பு உள்ளது .

5 . கழிவறையில் உட்காரும் போது கிப்லாவை முன்னோக்காமலும் பின்னோக்காமலும் இருப்பது சிறந்தது .

6 . மனிதர்கள் நடமாடும் இடங்களிலும் மரத்தடி நிழல்களிலும் மலம் ஜலம் கழிப்பதை
தவிர்த்துக்கொள்ள வேண்டும் .நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்

" இரண்டு நபர்கள்ம ற்றவர்களின் சாபத்திற்கு பயந்துக் கொள்ளட்டும் என்று
 சொன்னார்கள்  அந்த இரண்டு நபர் யார் என்று
 நபி ( ஸல் ) அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்க்கு அவர்கள் அந்த இரண்டு நபர்கள் யார் என்றால் மனிதர்கள் நடமாடும்  இடங்களிலும் 
மரத்தடி நிழல்களிலும் மலம் ஜலம்  கழிக்கக்கூடியவர்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா ( ரலி ) முஸ்லிம்

7 . கழிவுகளை இறக்கக்கூடிய ( உட்காரும்)  இடம் பள்ளமானதாகவும் 
மிருதுவானதாகவும் இருக்கவேண்டும் அறிவிப்பவர் இப்னு அப்பாஸ்( ரலி )  முஸ்லிம்

8.கழிவறைக்குள் நுழைந்து விட்டால் பேசுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் அறிவிப்பவர் இப்னு உமர் ( ரலி )  முஸ்லிம்

9.தேங்கி நிற்கும் தண்ணீரில் மலம்ஜலம் கழிக்கக்கூடாது புஹாரி  முஸ்லிம்

10 . குளிக்கும் இடத்திலேயே சிறு நீர் கழித்துவிட்டு குளிக்கக்கூடாது ஏன் 
என்றால் நாம் குளிக்கும் போது அவை நம் உடலில் பட வாய்ப்பு உள்ளது .     அபூ தாவூத்              

11 .மர்ம உறுப்பை வலது கையால் தொடக்கூடாது . முஸ்லிம்

12 . சிறுநீர் கழித்துவிட்டு விட்டை மற்றும்  எலும்பைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடாது ஏன் என்றால் இவை ஜின்களுக்கு உணவுகளாக உள்ளது முஸ்லிம்

13 .கல் மற்றும் நீரை உறிஞ்சக்கூடியவற்றை கொண்டு சுத்தம் செய்யும்போது மூன்று முறைக்கு குறையாமல் செய்வது சிறந்தது .முஸ்லிம்-அபூதாவூத்

14 .தூங்கி எழுந்ததும் இரு கைகளையும் கழுவாமல் எதிலும் கையை போடக்கூடாது .புஹாரி

15.முன் பின் துவாரங்களில் இருந்து எது வந்தாலும் அவை நஜீஸ் அசுத்தம் எனவே அவற்றை சுத்தம் செய்ய வேண்டும் விந்தைத்தவிர மணி விந்து அசுத்தம் இல்லை மறுப்பினும் விந்து வெளிப்பட்டால் குளிப்பு கடமையாகிவிடும் .

16.எதைக்கொண்டு சுத்தம் செய்தாலும் அவற்றை ஒற்றைப் படையாக  செய்ய வேண்டும்  முஸ்லிம்

17 . மலம் ஜலம் கழித்துவிட்டு சுத்தம் செய்த பிறகு அந்த கையை முதலில் மண் கொண்டு சுத்தம் செய்துவிட்டு பின் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும் . அபூதாவூத்

18 .கழிவறைகள் ஷைத்தான்களின் இருப்பிடமாக இருப்பதால் அதிக நேரம் உள்ளே இருக்காமல் நம் தேவைகளை முடித்துவிட்டு விரைவாக வெளியே வந்துவிட வேண்டும் .

19 .கழிவறையில் இருந்து வெளியே வரும் போது வலது காலை முன் வைத்து வெளியே வரவேண்டும் பிறகு " குப்ரானக் " ( யா அல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பாயாக ) என்ற துஆ வை ஓத வேண்டும் .

எனவே அன்புச் சகோதரர்களே  நம் அன்றாட வாழ்கையில் நடைமுறை படுத்த வேண்டிய இது போன்ற சிறுசிறு விஷங்களை வெறும் சுன்னத்தானக் காரியம்தானே என்று எண்ணி விட்டு விடாமல் சுன்னத்துகளையும் பேணி நடக்கக்கூடிய நன் மக்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக !!!!!
 

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

super machi kalakura da. by imman

அபு அஜ்மல் (முஹம்மது அபுதாஹிர்) சொன்னது…

ஏக இறைவன் ஒருவனுகே புகழ் அனைத்தும்

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்