ஜூன் 25, 2011

மாதுளையின் பயன்கள் !



பொதுவாக இயற்கை பானங்களை விரும்புவோர் அனைவருமே பழச்சாறுகளை (ஜூஸ்) அதிகம் விரும்பி அருந்துவார்கள்.

எல்லா வகைப் பழங்களுமே உடலுக்கு உகந்தவைதான் என்றாலும் மாதுளம் பழத்திற்கு என்று எப்போதுமே தனி மவுசு உள்ளது.


அதிலும் சமீப காலமாக மாம்பழ ஜூஸ், திராட்சைப் பழ ஜூஸ் போன்ற மற்ற பழங்களின் ஜூஸ்களைக் காட்டிலும் மாதுளம் பழச் சாற்றில் அதிகளவிலான பலன்கள் உள்ளதாக பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இதனால் மாதுளம் பழச் சாறுகளின் விற்பனையும் மேலோங்கியுள்ளது.

உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுப்பதில் மாதுளம் பழம் முக்கியப் பங்காற்றுகிறது என்பதை பல்வேறு நாளிதழ்களும், மருத்துவ இதழ்களும் வெளியிட்டு மாதுளம் பழத்தின் புகழை மேலும் பிரபலப்படுத்தி விட்டன.

கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சி தரும் மாதுளம் பழத்தின் அளவிடற்கரிய சத்துகளையும், மருத்துவ பலன்களையும் சொல்லி மாளாது.

தற்போது ஹோட்டல்கள், ஜூஸ் கடைகள், விருந்து-விழா நிகழ்ச்சிகள் என எல்லா இடங்களிலும் மாதுளம் பழ ஜூஸ்-க்கு தனியிடம் கிடைத்துள்ளது.

உணவுத் துறையில் தற்போது மாதுளம் பழத்தை `சூப்பர் புரூட்' என அழைக்கிறார்கள். ஆக்ஸிஜனேற்ற சக்தியை உடலுக்கு அளிப்பதில் மாதுளம் பழம் மிகப்பெரிய பங்காற்றுகிறது.

முன்கூட்டியே வயோதிகம் ஏற்படுவதையும் மாதுளம் பழம் தடுக்கிறது.

உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை குறைப்பதிலும், இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து, இதய நோய்களைத் தடுப்பதிலும் இதன் மருத்துவ குணம் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றுகிறது.

அன்றாடம் மாதுளம் பழ ஜூஸ் அருந்தி வர, ஆண்களுக்கான ஆக்ஸிஜனேற்றத்தை அது சீராக்கும் என்றும், பெண்களைப் பொறுத்தவரை மார்பகப் புற்று நோயை உருவாக்கும் செல்களை மாதுளம் பழம் அழிக்கும் தன்மை கொண்டது என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும் சிறுநீர்ப் பையை சுற்றியுள்ள ப்ரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை மாதுளம் பழத்திற்கு உண்டு என கண்டறியப்பட்டுள்ளது.

தவிர, குழந்தைப்பருவத்தில் நாம் நண்பர்களுடன் விளையாடிய நாட்களை நினைவுகூரும் தன்மையும் இந்த பழத்திற்கு உண்டு என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.அதாவது  நியாபக சக்தியை அதிகரிக்கும்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பு, புளிப்பும் கலந்த மாதுளைன்னு மொத்தம் மூன்று வகையான மாதுளை இருக்கின்றது. குடல் அழற்சியைப் போக்கிற சக்தி புளிப்பு மாதுளைக்கு உண்டு

இது, உணவு செரிக்கிறதையும் துரிதப்படுத்தும். மேலும், குடல்ல ஏற்படுற இயல்பான மாற்றங்களையும் சரி செய்யும் ஆற்றல் அதுக்கு உண்டு.

இனிப்பு மாதுளை, உடல் சூட்டைத் தணித்து, ரத்த விருத்தியைப் பெருக்கும். அதுமட்டுமல்லாமல், உடல் பலவீனத்தைப் போக்கி, தெம்பு கொடுக்கும்.

மாதுளையோட பூ, பழம், விதை, பட்டைன்னு எல்லாமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றது. வைட்டமின் சி மற்றும் பி இதுல அதிகமா இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்