டிசம்பர் 11, 2011

பாரசிட்டமால் மாத்திரை....! ! !

பாராசிட்டமால் மாத்திரைகளையோ, சிரப் களையோ தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு  லிவர் மற்றும் கிட்னி தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பிருப்பதாக சமீபத்திய மருத்துவ ஆய்வறிக்கைகள் எச்சரிக்கின்றன.

இனி மேல் பாராசிட்டமால் (அசிட்டமி னோபென்) மருந்துகளை தயாரிப்பவர்கள்  தங்களது நுகர்வோர்களுக்கு இந்த மருந்தை உட்கொள்வதால் லிவர் ,கிட்னி டேமேஜ் மற்றும் அலர்ஜியினால் உண்டாகும் பக்க விளைவுகள் ஏற்படும் என்று ஒவ்வொரு மருந்து பாட்டில் ரேப்பர்கள் மற்றும் மாத்திரைப் பட்டைகளில் எச்சரிக்கை வெளியிட வேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளது.

டாக்டர்கள் பரிந்துரைக்கும் பிரஸ்க்ரிப்சன் களை பேசன்டுகள் பெரும்பாலும் சரியாகப் புரிந்து கொள்வதே இல்லை.காய்ச்சல் என்று வரும் கைக்குழந்தைகளுக்கு டாக்டர்கள் 5 ml   பாராசிட்டமால் சிரப்(டானிக்) பரிந்துரைத்தால்  குழந்தையின் பெற்றோர்களில் சிலர் போதிய விஷய ஞானம் அற்று தவறுதலாக 5 ml  அளவுக்கு  பாராசிட்டமால் ட்ராப்ஸ் (சொட்டு மருந்துகொடுத்து விடுகிறார்கள்.

சிரப்பை விட இந்த ட்ராப்ஸ்கள் அதிக செறிவானவை. இத்தனை செறிவான மருந்தை உட்கொள்வதால் குழந் தைக்கு அலர்ஜியாகி பக்க விளைவுகள் ஏற்பட்டு மறுபடியும் மருத்துவரை நாடும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

மேலும் இப்படியே தொடர்ந்து மருந்துகளைக் கொடுத்து வந்தால் கடைசியாக அது கடுமையான ரீனல் டிஸ்ஆர்டர்களில் கொண்டு விடுகிறது.

பெரும்பான்மையான லிவர் மற்றும் கிட்னி டேமேஜ்கள் ஏற்பட இப்படியான கவனக்குறைவே முதலும் முக்கியமுமான  காரணமாகி விடுகிறது.

இவை தவிர லேசான காய்ச்சலுக்கும் கூட டெம்பரேச்சர் சோதித்துப் பார்க்காமல் டாக்டர்கள் கடுமையான காய்ச்சலுக்குப் பரிந்துரைத்த அதே அளவு பாராசிட்டமால் மருந்தை உட்கொள்வ தாலும் மேற்சொன்ன விளைவுகள் ஏற்படலாம்.

பெயின் கில்லர்கள் எடுத்துக் கொள்பவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தங்களது கிட்னி ஆரோக்யமாக இருக்கிறதா எனத் தொடர்ந்து பரிசோதிக்கத் தவறக்கூடாது.

ஏனெனில் இன்றைய நிலையில் சிறுநீரக பாதிப்பு என்று வரும் நோயாளிகளில் 8 முதல் 10 சதவிகிதம் பேர்களுக்கு கடுமையான பாதிப்புகளுக்கு தொடர்ந்து  பாராசிட்டமால் மருந்துகள் எடுத்துக் கொள்வதே காரணங்களாக இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
நன்றி: பாலைவனத் தூது

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்