ஏப்ரல் 07, 2011

நடைப்பயிற்ச்சி.....

சிறுவயதில் பிடித்த எல்லாவற்றையும் சாப்பிடுவோம் அது துள்ளிதிறிந்த காலம் ஒரே இடத்தில் குழந்தைகள் எப்போதும் இருப்பதில்லை ,கரையில் விழுந்த மீனின் துடிப்போடு ஓடியோடித்திரியும் அந்த வயது அதனால் உடலில் தேவையில்லாத கலோரிகள் எரிக்கப்பட்டுவிடும்.

ஆனால் வயது ஏற ஏற தொழில்/படிப்பு என்பது ஒரே இடத்தில் இருந்து அந்த துறைக்கான முக்கியத்துவத்தை கொடுக்கின்றோமே  தவிர எம் உடல் நிலையை கவனிப்பதே இல்லை.

இப்போது யோகா, தியானப்பயிற்சிகள் கூட ஆங்காங்கே காணக்கிடைப்பதன் காரணமும் அதுதான். இதனையும் விட உங்கள் எல்லோராலும் செய்யக்கூடியது ஒன்று உண்டு...

அதுதான் நடைப்பயிற்சி.       .(நடைக்கெல்லாம் ஒரு பயிற்சியா) என்று அங்கலாய்க்க வேண்டாம். நடை மிகச்சிறந்த உடற்பயிற்சி.


30 வயது தாண்டியவர்கள் ஆணாயிருப்பினும் சரி பெண்ணாயிருப்பினும் சரி ஆகக்குறைந்தது 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும். சாப்பிடும் சாப்பாட்டின் அளவைப்பொறுத்து உங்கள் கலோரியும் எரிக்கப்பட்டாலே உடல் அளவு மீறிச்சதை போடாமல் இருக்கும்.

நடையின் பயன்கள்...

நாள்தோறும் நடைப்பயிற்சி மேற்கொண்டால் இதயநோய், நீரிழிவு போன்ற நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவு.இது நாம் அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் நடைபயிற்சி மேற்கொள்வதால் மேலும் ஒரு பயன் இருப்பதாகச் சொல்கிறார்கள் அமெரிக்க ஆய்வாளர்கள்.
 (அமெரிக்கா சொன்னால் தான் நம்ம காதுகளுக்கு ஏறும்):)
 
நாள்தோறும் அரை மணிநேரம் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு சளி பிடிக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள ஃப்ரட் ஹட்சிஸன் புற்றுநோய் ஆய்வு மைய ஆய்வாளர் கோர்னிலா.எம்.யுல்ரிச் கூறுகிறார்:

நடைப்பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் தொற்றுநோய்கள் வராது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தொற்று கிருமிகளால் பரவும் ஜலதோஷமும் இதில் அடங்கும்.

கோர்னிலா தலைமையிலான ஆய்வாளர்கள், இது தொடர்பான ஆய்வில் மாதவிலக்கு நின்ற, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 115 பெண்களை உட்படுத்தினர்.

அவர்களில் ஒரு பிரிவினர் வாரத்திற்கு 5 நாள்கள் 45 நிமிடம் நடைபயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சி மேற்கொண்டனர்.

மற்றொரு பிரிவினர் உடற்பயிற்சி மேற்கொள்ளவில்லை. 3 மாதங்களுக்கு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உடற்பயிற்சி செய்தாத பெண்கள் 2 முறைக்கும் அதிகமாக ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டனர்.

உடற்பயிற்சி மேற்கொண்டவர்களுக்கு ஜலதோஷம் ஏற்படும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது. நாள்தோறும் சுமார் அரை மணிநேரம் நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிப்பதே இதற்கு காரணமாகும்.

பார்த்தீர்களா?!!


நடைப் பயிற்சியை துவங்குவதற்கு முன் : கை கால்களை நீட்டி, மடக்கி, சிறு
சிறு பயிற்சிகளை செய்து தசையை இலகுவாக்க வேண்டும்.

 உடலை வெதுவெதுப்பாக்கும் இதுபோன்ற `வார்ம்-அப்' (warm-up) பயிற்சி செய்தால், காயம் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம். நடையைத் துவங்கும்போது சாதாரணமாக நடப்பதைவிட சற்றே மெதுவாக நடைபோடத் துவங்குங்கள்.

மூச்சை சாதாரணமாக விடுங்கள். மூச்சை உள்ளே இழுக்கும்போதும், வெளியே விடும்போதும் எவ்வளவு அடி நடக்கிறீர்கள் என்பதை கணக்கிடுங்கள். இதை தினமும் செய்வதன் மூலம் உங்கள் கால்களையும், தசைகளையும் இப்பயிற்சிக்கு நீங்கள் தயார் படுத்தலாம்.

இப்பயிற்சியை துவங்கிய 2-வது வாரத்திலிருந்து, நாள் முழுதும் 5 நிமிடம்
அல்லது 10 நிமிடம் சிறிய சிறிய நடை பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

நடக்கும்போது நன்றாக நேராக நிமிர்ந்து நடங்கள். தோள்களை இலகுவாக
வைத்திருங்கள். கைகளை இயல்பாக ஆட்டியபடியே நடக்கலாம். உங்கள் அடிமுதுகு நேராக இருக்க - அடிவயிற்றை சற்றே எக்கி நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்என்ன வயதாயிருந்தாலும்  உங்களின் உடல்நிலை எவ்வாறாக இருந்தாலும், நடைப்பயிற்சி என்பது மிகவும் எளிமையான ஆனால் ஆரோக்கியம் காக்கும் பயிற்சியாகும். உங்களுடைய பலத்தை பராமரிக்கவும், அதிகரிக்கவும் `நடைபயிற்சி' போன்ற ஒரு சாதாரணமான பயிற்சி வேறு எதுவும் இல்லை.


இந்தப் பயிற்சியினால் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அறிந்து கொள்ள எவ்வளவு தூரம், எவ்வளவு நிமிடம் நடக்கிறீர்கள் என்பதை எழுதி வாருங்கள். நடக்கும்போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தையோ, அல்லது நீங்கள் பார்த்ததையோ எழுதி வந்தீர்களானால் இப்பயிற்சியை தொடர்ந்து நீங்கள் செய்ய உற்சாகம் ஏற்படும்.


உடல் விளைவுகளை கவனியுங்கள் : முதலில் நீங்கள் நடக்கும்போது, உங்களின் இதயம் வேகமாக அடித்துக் கொள்ளும். அல்லது சிலருக்கு சோர்வு கூட ஏற்படும். இதனால் ஒன்றும் இல்லை.

 உங்களின் இந்த புதிய பயிற்சிக்கு உடல் அமைப்புகள் தங்களை தயார் செய்து கொள்கிறது என்று அர்த்தம். ஆனால் எங்காவது `வலி' ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

என்ன வயதாயிருந்தாலும் உங்களின் உடல்நிலை எவ்வாறாக இருந்தாலும், நடைப்பயிற்சி என்பது மிகவும் எளிமையான ஆனால் ஆரோக்கியம் காக்கும் பயிற்சியாகும். உங்களுடைய பலத்தை பராமரிக்கவும், அதிகரிக்கவும் `நடைபயிற்சி' போன்ற ஒரு சாதாரணமான பயிற்சி வேறு எதுவும் இல்லை.

ஆகவே உங்கள் வயசுக்கு ஏற்றால் போல் நடவுங்கள்.....வீண் சதையும் குறையும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்....

1 கருத்து:

Unknown சொன்னது…

அன்புச் சகோதரரே நல்ல முயற்சி தொடருங்கள் உங்கள் பணியை ....

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்