மே 30, 2011

கடமையான குளியல் !

இத்தொகுப்பின் நோக்கம் பெருமானார் நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த சில வழிமுறைகளை (சுன்னாக்களை) நியாபகமூட்டுமுகமாக
 என்பதை எமது பழைய பதிவுகளிள் பார்த்தோம் இதன் வரிசையில் கடமையான குளிப்பை எவ்வாறு குளிப்பது ! என்பதைப் பற்றி பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ் !
முதலில் குளிப்பு எப்போது கடமையாகின்றது என்பதை பார்த்துவிட்டு பின் அதை எவ்வாறு குளிப்பது என்பதை பார்ப்போம்
1.   ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் தூக்கத்திலோ விழித்துக்கொண்டு இருக்கும்போதோ அல்லது உடலுறவுகொண்டோ விந்து வெளிப்பட்டால் குளிப்பு கடமையாகும்

2.   ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் சந்தித்துவிட்டபிறகு விந்து வெளியாகாவிட்டாலும் குளிப்பு கடமையாகும்

3.   மாதவிடாய் பிள்ளை பேறு துடக்கு ஏற்பட்டு நின்றபின் குளிப்பு கடமையாகும்

 குளிக்கும் முறை :-

1.   இரு கைகளையும் மணிகட்டு வரை கழுவுதல்

2.   வலக் கரத்தால் தண்ணீர் எடுத்து இடது கரத்தில் ஊற்றி மறை உறுப்பைக் கழுவுதல்

3.   உறுப்பை கழுவிய பின் கைகளை நிலத்தில் தேய்த்து சுத்தம் செய்து விட்டு தொழுகைக்கு உளூ செய்வதைப் போன்று உளூ செய்தல்

4.   விரல்களால் தண்ணீரைக் கொண்டு தலைமுடியின் அடிப்பாகத்தை கோதி விடுதல் பின் தண்ணீரை அள்ளி தலையில் மூன்று தடவை ஊற்ற வேண்டும்

5.   பின் வலது புறத்தில் துடங்கி உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றி கழுவ வேண்டும்
{ஆதார நூல் :- நஸாயீ தமிழாக்கம் பாடம் -14 முதல் 19 வரை காண்க}


மேற்கூறப்பட்ட அனைத்தும் ஆண்,பெண் இருபாலருக்கும் பொதுவானவை !


பெண்கள் குளிக்கும்போது தன் தலைகுடியை அவிழ்க்காமல் அப்படியே குளிக்கலாம் !


அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்…..
நானும் அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்களும் (சேர்ந்து) குளிப்போம் ஒரு ஸாஉ அளவு அல்லது அதற்கும் குறைந்த அளவு கொண்ட பாத்திரம் முன்னால் இருக்கும் அதில் நாங்கள் குளிக்கத் துவங்குவோம் என் இருகைகளால் மூன்று முறை என் தலையில் தண்ணீரை ஊற்றுவேன் ஆனால் தலை முடியை அவிழ்த்து விடமாட்டேன்
{ஆதாரம்: நஸாயீ தமீழாக்கம் பாடம் 12 ஹதீஸ் எண்-413}


எனவே அன்பு நெஞ்சங்களே படித்த இந்த விஷயத்தை பிறருக்கு எடுத்துச் சொல்லி இதை பின்பற்றுவதர்க்கு எனக்கும் உங்களுக்கும் ஏக இறைவன் அருள் புரிவானாக !

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்