ஜூலை 12, 2011

தங்கத்தை எவ்வாறு பாதுகாப்பது !


தங்கத்தை அடிக்கடி துணியால் துடைத்துக் கொள்ளலாம், பாலிஷ் செய்து கொள்ளலாம். பாலிஷக்கு கொடுக்கும் போதும் வாங்கும் போதும் எடையை சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.

அறிமுகம் இல்லாதவர்களிடம் பாலிஸக்கு கொடுத்து ஏமாந்து விடவேண்டாம்.
தங்கத்தில் பாதரசம் படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு பட்டுவிட்டால் தங்கம் கெட்டுவிடும்.

பாதரசம் பட்ட நகையை தனியாக எடுத்து பாலிஷ் செய்யும் கடையில் கொடுத்து நெருப்பில்காட்டி அதை சரிசெய்யது கொள்ளலாம்.

தங்கத்தில் கல் பதித்த நகைகள்

தங்கத்தின் கல் பதிப்பதால் அதன் விலை திரும்ப கொடுக்கும் போது மாற்றம் ஏற்படும்.
காரணம், நாம் நகை வாங்கும் பொழுது கல்லுடன் சேர்த்தே எடைபோட்டு தங்கத்தின் விலைக்கு கொடுக்கவேண்டும். அதாவது தங்கம் 10 கிராமும் கல் 2 கிராமும் இருந்தால் 12 கிராம் தங்கத்தின் விலையை நாம் கொடுக்கவேண்டும். ஆனால் பின்னர் திரும்ப கொடுக்கும் போது கல்லிற்கு உண்டான எடையை கழித்துவிட்டு தங்கம் எவ்வளவு எடை உள்ளதோ அதற்குதான் விலை கிடைக்கும்.

இது விலை உயர்ந்த கல்லாக இருந்தாலும் சரியே! வைரக்கல்லாக இருந்தால் தவிர!

வெளிநாடு, உள்ளநாடு தங்கத்தில் தரம் வித்தியாசம் உள்ளதா?

இல்லை, காரணம் வெளிநாட்டில் விற்கும் தங்கத்தின் தரத்தை இந்தியாவிலும் கொடுக்கிறார்கள். வெளிநாடுகளிலும் (ஒரு சில நாடுகளில்) 18 கேரட், 22 கேரட், 24 கேரட் இந்த மூன்று வகையான தரம் உள்ளது.

ஆகவே நாம் எந்த தரத்தை விரும்பி வாங்குகிறோமோ அதே தரமும் நமது நாட்டில் கிடைக்கிறது.

வெளிநாட்டில் எதை வாங்கினாலும் அது உயர்ந்த தரமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது தவறாகும். தங்கத்தைப் பெருத்தவரை மூன்றுவகையான தரமும் எல்லா நாடுகளிலும் கிடைக்கிறது.

ஆகவே வெளிநாடு உள்நாடு தரத்தில் மாற்றம் கிடையாது.

நகைகடைகளில் எவ்வாறு ஏமாற்றுகிறார்கள்?

நகை கடைகளை பொருத்தமட்டில் ஒரு நம்பிக்கைதான்! சில கடைகளில் வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால் பெரும்பாலான கடைகளில் ஏமாற்றுவதில்லை.

இருப்பினும் நாம் விழிப்புடன் இருப்பது நல்லது.

வாங்கும் போதும் விற்கும் போதும் எடையை சரிபார்த்து வாங்குவது நல்லது, ஏனெனில் ஒரு கிராம் குறைந்தாலும் இன்றைய நிலவரப்படி ஏரத்தாள 900 ரூபாய் போய்விடும். எனவே எடை விசயத்தில் விழிப்புடன் இருக்கவேண்டும்.

அவர்கள் போடும் கணக்குகள் சரியாக இருக்கிறதா? என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பழைய நகையை கொடுக்கும் போது எவ்வளவு ரூபாய்க்கு எடுக்கிறார்கள்? நமக்கும் தரும் நகையின் விலை எவ்வளவு? என்பதை சரி பார்த்து வாங்க வேண்டும். நகைகள் வாங்கும் போது கேடிஎம் நகைகளை வாங்குவது சிறந்தது.

தங்கத்தில் எத்தனை வகை உள்ளது?

தங்கத்தில் இரண்டு வகை உள்ளது. ஒன்று தற்போது மக்கள் பயன்படுத்தும் தங்கம். மற்றொன்று வெள்ளை தங்கம்  இது தங்கத்தை விட விலை அதிகம். இது மக்கள் மத்தியில் உபயோகம் குறைவு. தற்போது பெரிய நகரங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் தங்கச் சுரங்கம் உள்ளதா?

இந்தியாவில் கர்நடகா மாநிலத்தில் கோலார் என்ற ஊரில் தங்கச் சுரங்கம் உள்ளது.
ஆனால் தற்போது இந்தியாவில் எங்கும் தங்க உற்பத்தி இல்லை.

அதிகமான தங்கம் எங்கு கிடைக்கிறது?

தென்ஆப்ரிக்கா நாட்டில் கிடைக்கிறது.

தங்கத்தின் விலையை நிர்ணயிருப்பவர்கள் யார்?

தங்கத்தின் விலை  உலக அளவில் லன்டனிலும் இந்தியாவில் மும்பையிலும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

தகவல் : எஸ்.எஸ்.யூ. அப்துல் குத்தூஸ், காரைக்கால்

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்