தொழுகையில் இறையச்சத்துடன் நில்லுங்கள் என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். ”தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! 2: 238.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறையில் தொழுகையை அமைத்துக் கொண்டால் மட்டுமே இறையச்சத்துடன் தொழுகையில் நிற்க முடியும்
அதன் மூலம் மறுமையில் வெற்றிப் பெற முடியம் என்பதை அறிந்திருந்த வாயில் பின் ஹூஜைர் (ரலி) அவர்கள் தொழுகையை எவ்வாறு தொழவேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காக ஏமன் பிரதேசத்திலிருந்து மதீனா நகர் வரை மிகப்பெரிய சிரமத்திற்கு மத்தியில் பயணித்து வந்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை சந்தித்து தொழுகை செய்முறை விளக்கமறிந்து சென்ற வரலாற்றைப் படித்திருக்கின்றோம்.
அந்த நபித் தோழர் வாயிலாகவே என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள் என்ற நபிமொழியையும், அத்தஹயாத்தில் விரலசைக்கும் நபிமொழியையும் கூறக் கேட்டிருக்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மதீனாவிற்கு வெளியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்கள் நாலாப் புறங்களிலிருந்தும் பல நூரு மைல் தூரம் நடையாய் நடந்தும் மதீனா நகர் சென்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் முன்னிலையில் அமர்ந்து சீரிய தஃவாவை உள்ளத்தில் புகுத்திக்கொண்டு அதனடிப்படையில் தொழுகை, மற்றும் இன்னப்பிற அமல்களை அமைத்துக்கொண்டு நல்வாழ்க்கை வாழ்ந்த வரலாற்றைப் படித்திருக்கின்றோம்.
அவர்களுக்கு அடுத்த காலத்திலும் இது தொடர்ந்தது இறையச்ச
முடையவர்கள் ஆட்சியில் இருந்த காலம் வரை இதே நிலை நீடித்தது.
இன்றைய நிலை அவ்வாறில்லை இஸ்லாத்தை நோக்கி அழைக்கும் பணி ஒவ்வொருவருடைய வீட்டுக் கதவையும் தட்டும் அளவுக்கு இலகுவாகி விட்டது.
இரவு,பகல் செல்லும் இடங்களுக்கெல்லாம், கீழ்தட்டு–மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கெல்லாம் இந்த இஸ்லாம் சென்றடையும் என்;று இறைவனின் இறுதித்தூதர்(ஸல்)அவர்கள் முன்னறிவிப்பு செய்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கீழ்காணுமாறு கூறினார்கள் : இரவு, பகல் சென்றடையும் பிரதேசங்களையெல்லாம் இம்மார்க்கம் நிச்சயம் சென்றடையும். மதர், வபர் ஆகிய எந்தப் பிரதேசத்தையும் இறைவன் விட்டு வைக்க மாட்டான். அவற்றிலும் இந்த தீனை அல்லாஹ் நுழைவிப்பான். கண்ணியமுடையவன் கண்ணியம் பெறுவான். இழிவானவன் இழிவடைவான்... தமீம் அத்தாரி(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: முஸ்னத் அஹ்மத் பாகம் 4 : பக்கம் 103
இறைவனின் இறுதித்தூதர்(ஸல்)அவர்கள் முன்னறிவிப்பு செய்ததைப் போலவே இன்று உலகில் அதிகமானப் பகுதிகளுக்கு இஸ்லாம் சென்று விட்டது, இன்ஷா அல்லாஹ் மீதமுள்ளப் பகுதிகளுக்கும் இனி வரும் காலங்களில் சென்று விடும் இவ்வாறு இஸ்லாம் செல்வதற்கு காரணமாக அமைந்தது தஃவா.
கூரை வழியாக வரும் ஷைத்தான்.
இன்று தஃவா அவரவர் வீட்டுக் கதவைத் தட்டினாலும் கதவைத் திறந்து வரவேற்று நெஞ்சாரத் தழுவ மறுத்து கூரை வழியாக (கேபிள் மூலம்) வீட்டிற்குள் வரும் ஷைத்தானை நெஞ்சாரத் தழுவிக் கொண்டு அவன் உள்ளத்தில் புகுந்து தன் இஷ்டத்திற்கு வழி கெடுக்க வழி விடுகிறோம். இதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
தொழுகை குறிப்பிட்ட நேரத்தில் செய்யும் அமல் என்பதால் தொலைகாட்சி முன்பு அமர்ந்து கேளிக்கைகளை கண்டு களித்துக் கொண்டிருக்கும் போது நிகழ்ச்சியை பாதியில் முடித்து விட்டு எழுந்து சென்று குறிப்பிட்ட நேரத்தில் தொழுகையை நிறைவேற்ற முடியாமல் போவதால் தொழுகையை தொடர முடியாத துர்பாக்கிய நிலை சினிமா, சீரியல்களில் அமர்வதால் ஏற்படுகிறது.
தொலைகாட்சியில் தஃவா நிகழ்ச்சிகள் அல்லது நாட்டு நடப்புகள் போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாங்கு சொன்னால் பதிலளிக்க எண்ணம் ஏற்படும் இக்காமத்திற்கு முன் தொழுகைக்குச் செல்ல எண்ணம் ஏறபடும். ஆனால் சிமிமா, சீரியல் பார்க்கும்போது பாங்குக்குக் கூட பதிலளிக்க எண்ணம் ஏற்படுவதில்லை, இக்காமத்திற்கு முன் பள்ளி செல்வது என்பது கேள்விக் குறியான விஷயமாகிறது.
நமக்கே இந்த நிலை என்றால் பசுமரத்தானிப் போன்றுப் பதியும் சிறுப் பிராயத்துக் குழந்தைகளை நம்முடன் சேர்த்து அமர வைத்துக் கொண்டு சினிமா, சீரியல் நிகழ்ச்சிகளைப் பார்த்தால் அவர்கள் எவ்வாறு தொழுகையை முறைப்படி அமைத்துக் கொள்ள முடியும் ?
அதனால் குர்ஆன்- ஹதீஸ் அடிப்படையில் நடைபெறும் பயான் நிகழ்ச்சிகளை பிள்ளைகளுடன் அமர்ந்து பார்க்க வேண்டும். இப்போது மார்க்க நிகழ்ச்சி என்றப் பெயரால் கோயிலில் காணிக்கைத் தட்டுடன் பெயர் கூறி நடத்தப்படும் பூஜையை மிஞ்சும் அளவுக்கு நிகழ்ச்சிகள் நடைப் பெறுவதால் இதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதற்கடுத்ததாக குர்ஆன்- ஹதீஸ் அடிப்படையில் பயான்கள் நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும், தவறினால் தொழுவார் தொழுவார் தொழுது கொண்டே இருப்பார் தொழுகை உள்ளத்தில் நுழையாது, அச்சத்தையும் ஏற்படுத்தாது. அல்லாஹ்வுக்காகவென்று உள்ளத் தொழுகை பிறருக்கு காட்டுவதற்காகவென்றும்
உலக ஆதாயங்களுக்காகவென்றும் மாறிவிடும் அபாயம் ஏற்பட்டு விடும்.
தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர். 107: 4, 5. 6.
லுக்மான்(அலை) அவர்கள் தங்கள் மகனிடம் அல்லாஹ்வை அவனுடைய வல்லமைக்கொப்பப் புகழ்ந்து விட்டு தொழுகையை கடைபிடிக்குமாறும், தஃவா செய்யுமாறும், தஃவா செய்யும்போது ஏற்படும் சிரமங்களை சகித்துக் கொள்ளுமாறும் உபதேசம் கூறியதை அல்லாஹ் தன் திருமறையில் சொல்லிக் காட்டுகிறான்.
31:16. என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன் நன்கறிந்தவன்.
31:17. என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.
31:18. மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
என்று லுக்மான்(அலை) அவர்கள் தங்கள் மகனுக்கு ஆற்றிய மேற்காணும் உபதேசங்களிலும் முதன்மையாக அமைவது தொழுகையும், தஃவாவுமாகும்.
Ø எவரிடத்தில் தொழுகையும், தஃவா சிந்தனையும் இருக்குமோ அவரிடத்தில் பொறுமையும், சகிப்புத் தன்மையும் உருவாகும்.
Ø எவரிடத்தில் தொழுகையும், தஃவா சிந்தனையும் இல்லையோ அவரிடத்தில் அகம்பாவமும், ஆணவமும் உருவாவதை எவராலும், எவற்றாலும் தடுத்து நிருத்த முடியாது.
லுக்மான்(அலை)அவர்கள் இறைத்தூதராக இருந்த காரணத்தால் இறைச்செய்தியைப் பெற்று தங்களுக்கு ஏவிக் கொண்டு தங்கள் மகனுக்கும் ஏவி மக்களுக்கு ஏவச் சொன்னார்கள்.
இன்று இறைச்செய்தியும், இறைத்தூதருடைய அப்பழுக்கற்ற வாழ்க்கை வரலாற்றின் மொத்தத் தொகுப்பும் நம்மிடம் இருப்பதால் அவற்றைப் படித்து நமக்கும் ஏவிக்கொண்டு நம்முடையப் பிள்ளைகளுக்கும் ஏவி, அதை அறியாத மக்களுக்கும் ஏவச் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்தால் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செய்த
இரவு, பகல் சென்றடையும் பிரதேசங்களையெல்லாம் இம்மார்க்கம் நிச்சயம் சென்றடையும். என்ற முன்னறிவிப்புக்கு வழிகோலியதாக அமையும்.
லுக்மான்(அலை) அவர்கள் தங்கள் மகனுக்கு தொழுகையை ஏவி, அதற்கடுத்து மக்களை நேர்வழியில் அழைக்கும் பணியில் ஈடுபடுத்தியதை அல்லாஹ் நமக்கு சொல்லிக் காட்டுவதன் நோக்கம் நாமும் நம்முடையப் பிள்ளைகளை அவ்வாறே ஏவ வேண்டும் என்பதற்காகத் தான் என்பதை இறுதியாக ஒருமறை விளங்கிக் கொண்டு நம் பிள்ளைகளை தொழுகைக்கு அடுத்து தஃவாப் பணியில் ஈடுபடுத்த முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹ் நாடிவிட்டால் அவர்களை ஸனது பெற்ற அறிஞர்களுக்கு நிகரான அழைப்பாளர்களாக மாற்றி விடுவான் அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான்.
பிள்ளைகளுக்கு தொழுகையையும், தஃவாவுடனானத் தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் அலச்சியம் செய்து அதனால் அவர்கள் வழி தவறினால் அவர்களுடன் நாமும் அல்லாஹ்விடத்தில் விசாரனைக்கு உட்படுத்தப்படுவோம்.
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்கள். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான்.
தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்.'' புhகரி 893
தொழுகையையும், தஃவாவுடனானத் தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தால் அல்லது அவர்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மறுத்தால் நாம் விசாரனைக்கு உட்படுத்த மாட்டோம் அல்லாஹ் நம்மைக் குற்றம் பிடிக்க மாட்டான்.
முறைப்படி தொழுகையை அமைத்துக் கொள்வதற்கும், அல்லாஹ்வின் வல்லமையை தெரிந்து கொள்வதற்கும், பொறுமையை கடைப்பிடிப்பதற்கும், சக மனிதர்களின் தவறுகளை சகித்துக் கொள்வதற்கும், அகம்பாவம்- ஆணவம் கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கும்
தொழுகையுடன், தஃவாவுடனான சிந்தனையை நம் பிள்ளைகளுக்கு ஏவி அதன் மூலம் அவர்கள் நேர்வழிப் பெற்று நம்முடைய கப்ரு, மற்றும் ஆகிரத்து வாழ்வுக்காக துஆச் செய்யும் ஒழுக்கமிக்கப் பிள்ளைகளாக வளர்வதற்கு வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக !
நன்றி- சகோ அதிரை ஃபாரூக்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக