மே 18, 2011

ஜனாஸா தொழுகையில் என்ன ஓதுவது ?

மரணித்தவரின் மறுமை நன்மைக்காக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய காரியங்களில் ஜனாஸாத் தொழுகை முக்கியமானதாகும்
இறந்தவரின் பாவங்களை மன்னிக்கும்மாறும் மறுமையில் அவருக்கு சொர்க்கத்தை அளிக்கும்மாறும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகையைக் கற்றுத் தந்துள்ளார்கள்.
ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்பவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு அடக்கம் செய்யப்படும்வரை கலந்துகொள்பவருக்கு இரண்டு கீராத் நன்மையுண்டு ன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
இரண்டு கீராத்கள் என்றால் என்ன? என கேட்க்கப்பட்டது அதற்கவர்கள் இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மைகள்) என்றார்கள்       அறிவிப்பவர்:அபூ ஹுரைரா (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்,அபூதாவூத்,திர்மிதி
இத்தொகுப்பின் நோக்கம் ஜனாஸா தொழுகையில் ஓதப்படவேண்டியவை என்ன ? என்பதைப் பற்றி தெரியாத சகோதரர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதர்க்காகவே !
ஜனாஸா தொழுகையின் சட்டங்களை முலுமையாக அறிய இத்தொகுப்பின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய Link-ய்-Click செய்யவும்
Ø  தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ)ஆகும் அதன் துவக்கம் தஹ்ரீமா(அல்லாஹீ அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூரினார்கள் அறிவிப்பவர்:- அலீ(ரலி) நூல்கள்: அபூதாவூத்,திர்மிதி,இப்னு மாஜா,அஹ்மத்
எனவே ஜனாஸா தொழுகைக்கும் உளூ அவசியம் உளூ எடுத்தப் பின் கிப்லாவை முன்னோக்கி நிற்க்க வேண்டும்
மற்ற தொழுகைகளைப் போல இவற்றில் ருகூவு ஸஜ்தா போன்றவை கிடையாது நின்ற நிலையில் நான்கு தக்பீர்களைக் கொண்டு சில பிரார்த்தனைகளைச் செய்வது தான் ஜனாஸா தொழுகையாகும்
Ø  தக்பீர்களுக்கு இடையே ஓத வேண்டியவை
நான்கு தக்பீர் கூற வேண்டும் என்றால் தொடர்ச்சியாக இடைவேளியில்லாமல் தக்பீர் கூற வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது  மாறாக ஒரு தக்பீருக்கும் இன்னொரு தக்பீர்க்கும் இடையே கூற வேண்டிய திக்ருகள் உள்ளன அவற்றை அந்தந்த இடங்களில் கூறிக் கொள்ள வேண்டும்
Ø  முதல் தக்பீருக்குப் பின்
முதல் தக்பீர் கூறிய பின் அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்தியா) ஓத வேண்டும்
Ø  இரண்டாம் தக்பீருக்கு பின்
இரண்டாம் தக்பீர் கூறிய பின் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும் ””அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்
Ø  மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்
மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின் இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும் மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும் ஜனாஸா தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள் அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்
அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார் அறிவிப்பவர் அவ்ஃப் பின் மாலிக்(ரலி) நூல்- புஹாரி
பொருள்:
இறைவா ! இவரை மன்னித்து அருள் புரிவாயக ! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக ! இவர் செல்லுமிட்த்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக !
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக ! பனிகட்டி ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக !
அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல் இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக ! இவரது குடும்பத்தாரை விடச் சிறந்த குடும்பத்தாரை இவறுக்கு ஏற்படுத்துவாயாக !
இங்குள்ள ஜோடியை விட சிறந்த ஜோடியை இவருக்குக் கொடுத்தருள்வாயாக ! கப்ரின் வேதனையை விட்டும் நரகின் வேதனையை விட்டும் இவரைப் பாதுகாத்து இவரைச் சொர்க்கத்தில் புகச் செய்வாயாக !     
இத்தொகுப்பு சகோ. பீ.ஜே. அவர்கள் எழுதிய ஜனாஸா தொழுகை என்ற நூலின் உதவி கொண்டு உருவாக்கப்பட்ட்து ஜனாஸா தொழுகையின் சட்டங்களை முலுமையாக அறிய இங்கே Click செய்யவும்

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்