மார்ச் 15, 2011

கணினியில் உள்ள பைல் வகைகள்

 
நம் கம்ப்யூட்டரில் பல வகை பைல்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. 


ஒரு சிலவற்றையே நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம்.இதனால் தான் நம் நண்பர்கள் இமெயில் மூலமாக ஏதெனும் ஒரு பைல் அனுப்புகையிலும் வெப் தளங்களில் இருந்து ஒரு பைலை இறக்கிய சூழ்நிலையிலும்
 அந்த பைல் வகை என்ன? அது எதற்குப் பயன்படுகிறது? எந்த அப்ளிகேஷனில் அவற்றைத் திறந்து பயன்படுத்தலாம் போன்ற கேள்விகளுக்குப் பதில் இன்றி தேடுகிறோம்.
இங்கு சில முக்கிய பைல் வகைகள் அவற்றின் துணைப் பெயர் களுடன் தரப்படுகின்றன. பொதுவாக அவற்றைத் திறக்கும் அப்ளிகேஷன் பெயரும் உடன் தரப்படுகிறது.

.avi -
வீடியோ பைல். விண்டோஸ் மீடியா பிளேயர்

.bmp -
பட பைல். பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ ஷாப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேஷன்களில் திறந்து பயன்படுத்தலாம்.


.cfg  -
கான்பிகரேஷன் பைல். இதனைத் திறந்து பயன்படுத்தக் கூடாது.


.dat -
டேட்டா அடங்கிய தகவல் பைல். டேட்டாவினைக் கையாளும் எந்த ஒரு அப்ளிகேஷனிலும் இதனைத் திறக்கலாம்.
 

.doc  -
டாகுமெண்ட் பைல். வேர்ட் தொகுப்பில் திறந்து பயன்படுத்தலாம்.


.exe  -
எக்ஸிகியூட்டபிள் பைல் ( Executable File ). புரோகிராம் ஒன்றின் முதன்மையான பைல். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த புரோகிராம் இயங்கும்.


.gif   -
பட பைல். பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ ஷாப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேஷன்களில் திறந்து பயன்படுத்தலாம்.


.htm  -
இணைய தளத்தில் வைக்கப்படும் டாகுமெண்ட். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உட்பட எந்த பிரவுசரிலும் இதனைத் திறந்து பயன்படுத்தலாம்


.html  -
இணைய தளத்தில் வைக்கப்படும் டாகுமெண்ட். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உட்பட எந்த பிரவுசரிலும் இதனைத் திறந்து பயன்படுத்தலாம்

.ini  - 
டெக்ஸ்ட் கான்பிகர் செய்யக் கூடிய பைல் நோட்பேடில் திறக்கலாம்


.jpeg/jpg  -
பட பைல். பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ ஷாப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேஷன்களில் திறந்து பயன்படுத்தலாம்.

.mov  -
மூவி பைல். குயிக் டைம் அப்ளிகேஷனில் திறக்கலாம்.


.mpeg/mpg  -
வீடியோ   பைல். குயிக் டைம் மற்றும் விண் ஆம்ப் புரோகிராம்களில் திறக்கலாம்.


.mp3  -
ஆடியோ பைல் விண்டோஸ் மீடியா பிளேயர்  மற்றும் விண் ஆம்ப் போன்ற அப்ளிகேஷன்களில் திறக்கலாம்


.pdf   -
போர்ட்டபிள் டாகுமெண்ட் பைல். அடோப் ரீடர் போன்ற பி.டி.எப். பைல்களைத் திறக்கும் எந்த சாப்ட்வேர் புரோகிராமிலும் திறக்கலாம்

.pps   - Slide Show
பிரசன்டேஷன் பைல். பவர் பாய்ண்ட் புரோகிராமில் திறக்கலாம்.

.ppt  - Slide Show
பிரசன்டேஷன் பைல். பவர் பாய்ண்ட் புரோகிராமில் திறக்கலாம்.

.sys  -
சிஸ்டம் பைல். திறக்க வேண்டாமே.


 .txt  டெக்ஸ்ட் பைல். நோட்பேடில் திறக்கலாம். 


.wav  -
ஆடியோ பைல். விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண் ஆம்ப் போன்ற ஆடியோ புரோகிராம் களில் திறந்து பயன்படுத்தலாம்

.xls  - ஸ்ப்ரெட் ஷீட் பைல். எக்ஸெல் தொகுப்பில் பயன்படுத்தலாம்

.zip 
சுருக்கப்பட்ட பைல். விண்ஸிப் புரோகிராம் பைல்களை விரித்துக் கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்