மார்ச் 02, 2011

குடும்பம்


        நீங்கள் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடிகளைப் படைத்திருப்பதும் உங்களிடையே அன்பையும், நேசத்தையும் உண்டாக்கிருப்பதும், அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பற்பல) அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21)       


உங்களில் சிறந்தவர் யார் என்றால்,....உங்களது மனைவிமார்களிடம் சிறந்தவர் எவரோ அவரே! என்னுடைய மனைவிமார்களிடத்தில் நான் மிகவும் சிறந்தவனாக இருக்கின்றேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
   

மனைவியர்களான) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், (கணவர்களாகிய) நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள்”. 2:187   முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (66:6)


ஆண்களே! நீங்கள் உங்கள் மனைவிக்கு நல்ல கணவனாக விரும்பினால் இறையச்சம் உடையோராகி விடுங்கள். இந்த இறையச்சமே உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே உள்ள உறவை வளப்படுத்தி மேம்படுத்தக் கூடியதாக இருக்கும்.


அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அவரவர் பொருளாதாரத்தின் அடிப்படையில் செய்து கொடுத்து மனைவியரை உடலாலோ மனதாலோ நோவினை செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் குடும்ப பராமரிப்பு, மார்க்க வழிகாட்டுதல், ஒழுக்க மாண்புகளில் கவனம் செலுத்துதல் முக்கியமாக பொருளீட்டுதல் இவையாவும் இன்றியமையாததாகும்

மரணத்தின் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படுகின்ற அந்த நாளில், தனக்குக் கீழ் உள்ளவர்களைப் பற்றி குடும்பத் தலைவன் விசாரணைக்கு உட்படுத்தப்படுவான் என்ற மிகப் பெரும் பொறுப்பு அவன் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒவ்வொரு மேய்ப்பாளரையும் (பொறுப்பாளரும்) அவனுடைய மந்தைகளைப் பற்றி (தன்மீது பொறுப்புச் சுமத்தப்பட்டவர்கள் பற்றி) அல்லாஹ் (மறுமை நாளில்) விசாரிப்பான், அதனை அவர் பாதுகாத்தாரா அல்லது அதனை உதாசினம் செய்தாரா, என்பது பற்றி ஒவ்வொரு மனிதரும் விசாரிக்கப்படாமல் இருக்க மாட்டார்.


 இன்னும் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய இல்லத்தை மறுசீரமைப்புச் செய்வதற்கு முயற்சி எடுத்துக் கொள்வதற்கு விரைவதற்கு அல்லாஹ் துணை நிற்கட்டும்.
 லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்31:16
 என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.31:17
 முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.66:6
  
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் 80:34.தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;80:35தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-80:36அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.80:37


நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: எந்தப் பெண் (மனைவி) அனைவரையும் விடச் சிறந்தவள்?’ அண்ணலார்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, ...தன் விஷயத்திலும், தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்’.ஆதாரம்: நஸயீ 


அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார் நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'நபி(ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்துவந்தார்கள். தொழுகை அற...ிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள். 17
 அனஸ்(ரலி) அறிவித்தார்.
"
அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது. பனூ நஜ்ஜார் குடும்பம் ஆகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பம் ஆகும். பிறகு பனூல் ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் குடும்பம் ஆகும். பிறகு பனூ சாஇதா குடும்பம் ஆகும். அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ உசைத்(ரலி) அறிவித்தார்.



அப்போது ஸஅத் இப்னு உபாதா(ரலி) இஸ்லாத்தில் செல்வாக்கு உடையவர்களாக அன்னார் இருந்தார்கள். 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நம்மை விட (மற்ற குடும்பங்களை) சிறப்புக்குரியவர்களாக ஆக்கிவிட்டதை நான் பார்க்கிறேன்" என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'உங்களை நபி(ஸல்) அவர்கள் நிறைய மக்களை விடச் சிறப்பித்துக் கூறினார்கள்" என்று சொல்லப்பட்டது.


அல்லாஹ் கூறுகின்றான்:
          (
பாலூட்டும் பெண்களாகிய) அவர்களுக்கு நல்ல முறையில் உணவளிப்பதும் உடை தருவதும் தந்தை மீதுள்ள கடமையாகும். அல்குர்ஆன் 2:223)


வசதியானர், தன் வசதிக்கு ஏற்ப (தாராளமாகச் செலவழிக்கட்டும். பொருளாதார நெருக்கடியானவர், அல்லாஹ் தனக்கு வழங்கியதிலிருந்து செலவு செய்யட்டும் எந்த ஆத்மாக்களையும் தான் வழங்கியுள்ள அளவுக்கே தவிர கஸ்டம் கொடுக்க மாட்டான்......(அல்குர்ஆன் 65:07)
 
...
எதை நீங்கள் செலவு செய்தாலும், அதற்கு அவன் (அல்லாஹ்) பகரமாகத் தருவான்...    (அல்குர்ஆன் 34:39) 


அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:

''
அல்லாஹ்வின் பாதையில் நீ செலவு செய்த ஒரு தீனார், அடிமையை விடுதலை செய்ய நீ செலவு செய்த ஒரு தீனார், ஏழைகளுக்கு நீ தர்மம் செய்த ஒரு தீனார், உன் குடும்பத்தாருக்கு நீ செலவு செய்த ஒரு தீனார், ஆகிய ...(நான்கில்) கூலி பெறுவதில் மிக மேன்மையானது, உன் குடும்பத்தாருக்கு நீ செலவு செய்ததுதான்'' என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
(
முஸ்லிம்)


 5351. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால் அதுவும் அவருக்கு தர்மமாக மாறும்.
என அபூ மஸ்வூத் உக்பா இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். 


6745. இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரைவிட நானே நெருக்கமான (உரிமையுடைய)வனாவேன். எனவே, செல்வத்தைவிட்டுவிட்டு இறந்தவரின் செல்வம் (அவருடைய) தந்தை வழியிலுள்ள நெருங்கிய உறவினர்களுக்குரியதாகும். (குடும்பம் மற்றும் கடன் போன்ற) சுமைகள்  சொத்தில்லா குழந்தைகள் ஆகியவற்றைவிட்டுச் செல்கிறவருக்கு நான் பொறுப்பாளியாவேன். அவருக்காக என்னை அழைக்கலாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :7 Book :86
  


அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் என் தாயார் ஆசையாக என்னிடம் வந்தார். (அப்போது அவர் இணைவைப்பவராக இருந்தார்.) நான் நபி(ஸல்) அவர்களிடம் '(என் தாயார் வந்துள்ளார்.) அவருடன் உறவைப் பேணிக்கொள்ளட்டுமா?' என்று கேட்டேன் . நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று கூறினார்கள்.11
'
எனவே, அஸ்மாவின் தாயர் தொடர்பாக, 'மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கிறான்' எனும் (திருக்குர்ஆன் 60:8 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்' என (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்.

Volume :6 Book :78
 


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான். என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.15
Volume :6 Book :78
 


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும்.18 எனவே, இறைவன் (உறவை நோக்கி) 'உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவுபாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும்... முறித்துக்கொள்வேன்' என்று கூறினான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :6 Book :78

கருத்துகள் இல்லை:

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்