மே 04, 2011

Internet-வசியக்காரன்


இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் இணையத்தை விட்டு மீள முடியாமல் இருக்கிறோம்


எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் நன்மைக்கே, நன்மைக்கே.. என்று கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும், அதனோடு சில தீமைகளையும் சேர்ந்தே வந்துவிடுகிறது.
அவற்றுள் இந்த இண்டெர்னெட் என்பது மறுக்கவொன்னா நன்மைகளையும், சேர்க்கவொன்னா தீமைகளையும் ஒருங்கே பெற்றிருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
இதன் முக்கியத்துவம் அதிகம் இருந்தாலும் இதற்கு அடிமைபட்டுக் கிடப்பது எவ்வகையில் நியாயம்? அது தாங்க இண்டெர்னெட் அடிக்‌ஷன்..
இண்டெர்னெட் அடிக்‌ஷன் என்றால் என்ன?

இணையம் சம்பந்தப்பட்ட பயன்பாடுகளில் அதிக கவனம் செலவழித்து விட்டு ஜீவனுள்ள, கூடவே இருக்கும் உறவுகளுக்கு நேரம் ஒதுக்காமல், வேலை செய்யுமிடத்திலும் சரிவர கவனம் செலுத்த முடியாமலும், ஒரு விதமான மன அழுத்தத்துடனே இருப்பது.
Types of internet addiction:

1. Always want to open any kind of websites

2. chat rooms

3 .Interactive games

4. Database search engine

5. Pornography

6. cybersex

சரி, ஒருவர் இந்த பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறாரா என்பதை
எப்படித் தெரிந்து கொள்வது? உங்களுக்குள்ளாகவே சில கேள்விகளைக் கேட்டு அதற்கு உண்மையான பதில்களும் கொடுத்து விட்டு பின்பு தொடருங்கள்.
1.இதற்கு முன்பாக செய்த அல்லது இனி செய்யப் பொகும் ஆன்லைன்
ஆக்டிவிட்டிகளையே அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?
2.அதிகப் படியான நேரத்தை ஆன்லைனில் செலவிட்டால்தான்
உங்களுக்கு ஒரு சேட்டிஸ்வேக்‌ஷன் கிடைக்கிறதா?
3.நான் அதிகமான இணையத்தைப் பயன்படுத்துகிறேன், இதைத் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் அடிக்கடி நினைப்பதுண்டா?

4.நீங்கள் இணையத்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் போது, இணைய வசதி தடைப்பட்டால், அதன்பின்பு நீங்கள் moody யாகவோ,
restless ஆகவோ, இல்லை ஒரு விதமான மன அழுத்தத்துடனோ காணப்படுகிறீர்களா?
5.இணையத்தில் நீங்கள் ஆரம்ப காலக்கட்டங்களில் செலவிட்ட
நேரத்தை விட தற்பொழுது,அதிகமான நேரத்தை செலவிடுவதாக உணர்கிறீர்களா?
6.இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் ரத்த உறவுகளையோ இல்லை.. வேலை,படிப்பு என்று எதையாவது இழந்திருக்கிறீர்களா?
7.இதைச் செய்வதற்காக உங்கள் குடும்ப உறுப்பினரிடமோ இல்லை
உங்கள் மேலதிகாரிகளிடமோ அடிக்கடி பொய் சொல்ல நேரிடுகிறதா?
8.உங்கள் முக்கிய பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க இது ஒரு வடிகாலாக அமைகிறதா?
மேலே கூறியுள்ள எட்டு கேள்விகளில் ஐந்துக்காகவாது நீங்கள் ஆம் என்று பதில் அளித்திருந்தால், இது கவலைக்குரிய விஷயமே.. எனவே இது தொடர்பாக நீங்கள் உங்களை ஆராய்ந்து, ஒழுங்கு படுத்திக் கொள்ளும் நிர்பந்தத்தில் இருக்கிறீர்கள்.
Matrimoniyallawyers சொல்கிறார்கள் தற்பொழுது படித்தவர்கள் கொண்டு வருகின்ற விவாகரத்து வழக்குகளில் இந்த இண்டெர்னெட் அடிக்‌ஷன் ஒரு மோசமான பங்கை வகிக்கிறது என்பது நெஞ்சில் முள்ளாய்க் குத்துகிறது. பெரும்பாலும் 30+ வயதுடைய ஆண்களும் பெண்களுமே இந்த அவல நிலையை அடைகிறார்கள்.
இத்தகைய பழக்கம் உடையவர்கள், எப்பொழுதும் சோஷியல் ஆக்டிவிடிகளில், அதாவது உறவினர் திருமணம், பங்கு பெற விரும்புவதில்லையாம். அத்தோடு தங்களுடைய அன்றாடத் தேவையான வேலைகளைக் கூட விருப்பமில்லாமல் செய்வது.
பள்ளிக்கு அனுப்பிய தன்குழந்தையைக் கூட கூப்பிட செல்லாமல்,மறந்து இரவு வரையிலும் இணையத்தில் செலவிட்ட தாயின் கதையைப் படித்தவுடன் மனது மிகவும் கனத்துத்தான் பொய் விட்டது.

இப்படிப்பட்டவர்கள் தங்கள் குடும்ப உறுபினர்களிடம் அடிக்கடி சொல்கின்ற ஒரு விசயம் என்னவென்றால், நான் இணையத்தைப் பயன்படுத்தும் பொழுது சந்தோசமாக இருக்கிறேன், என் சுதந்திரத்தைப் பறிக்காதீர்கள், லீவ் மீ அலோன் என்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இப்பழக்கத்திற்கு உட்பட்டவர்கள் ரியல் டைம் நண்பர்களை, உறவினர்களைத் தவிர்க்கிறார்கள். இவை எல்லாவற்றையும் விட சிலர்,  தான் எப்பொழுதும் ஆன்லைனில் இருப்பதைப் பெருமையாகவும்
எடுத்துக் கொள்கிறார்களாம். இது இப்பழக்கத்தின் ஆரம்ப நிலையாம்.
இது தவிர்த்து சில அதி பயங்கரமான நிகழ்வுகளும் உண்டு. தேவையற்ற அதிகப்படியான இணைய நண்பர்களைச் சம்பாதிப்பது, சிலர் ஒரு படி மேலே போய், இத்தகைய சில அநாவசியமான நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு,தங்களின் செக்சுவல் நீட்ஸைப் பூர்த்தி செய்து கொள்வது. இது மிகவும் ஆபத்தான நிலையாகும்.
சரி, பெரியவர்கள் தான் இப்படி என்றால், ஐயகோ,பள்ளி/கல்லூரிக் குழந்தைகளையும் இந்த இண்டெர்னெட் வலை விட்டு வைக்கவில்லை என்பது மறுக்கமுடியா உண்மை.
சரி இவர்கள் பாடம் சம்பந்தப்பட்ட விசயங்களுக்காகத் தானே பயன்படுத்துகிறார்கள் என்றாலும், ஒரு சர்வே சொல்கிறது,அதாவது 85%மாணவர்கள் இதனால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லையாம், ஏனென்றால்,பெரும்பான்மையான வெப்சைட்கள் அவர்கள் பாடத்திட்டம் சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டுமே கொடுப்பதில்லை.
அத்தோடு அவர்கள் நேரத்தயும் வீணடிக்கிறது ஆன்லைன் கேம்ஸ் என்ற உருவத்தில்..
சரி இதற்கு என்னதான் தீர்வு என்று பார்ப்போமேயானால்,முதலில் நாம் இப்பழக்கத்திற்கு உட்பட்டு இருப்பதாக உணர்ந்தால், முதலில் நம் தப்பை நாம் ஏற்றுகொள்ள வேண்டும். பின்பு இதற்கு தகுந்த முறையில் மருத்துவர்களை அணுகி சிகிச்சைமுறைகளைப் பெற வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தானே.. எனவே இண்டெர்னெட் வசதியை அளவோடு பயன்படுத்தி நாம் பிள்ளைகளோடும் குடும்பத்தோடும் வளமாக வாழ்வோம்..
நன்றி: அதிர்ச்சி.காம்

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தொடர்ந்து இண்டர்னெட் பற்றி எழுதுங்கள் நண்பரே

அபு அஜ்மல் (முஹம்மது அபுதாஹிர்) சொன்னது…

அன்புச் சகோ.ஆர்.கே.சதீஷ்குமார் அவர்களே !
இந்த ஆக்கம் என்னுடைய சொந்த ஆக்கம் அல்ல
”அதிர்ச்சி” என்ற தளத்தில் இருந்து தொகுக்கப்பட்ட செய்திதான் இந்த Internetவசியக்காரன் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் டைப் செய்ய தமிழை தேர்வு செய்யவும்